Tuesday, May 21, 2019

மணிமுடி



அன்புள்ள ஜெயமோகன் சார், 
                                                                                                                                                                                                                                                                                 
இருட்கனியின் 38ம் அத்தியாத்தில் தனது மணிமுடியின் இழிவை கண்ட தர்மர் அரசர்களின் பேரிழிவுகளை குறித்து கூறுவதின் வீரியத்தை  இப்போதுதான் என் மனம்  அறிகிறது. வெண்முரசில் நூற்றுகணக்கான அரசர்கள் கொடிய,இழிந்த மரணத்தை அடைத்திருக்கிறார்கள். அது கதையின் போக்கில் ஒரு சம்பவம் என்றே கடந்து சென்று இருகிறேன் . அரசர்களை குறித்து சிந்திக்கும்போது வந்த கேள்வி "இந்த பூமியில் தன்னை ஒரு அரசன் என்று முதலில் அறிவித்துகொண்டவன் யார்? ஏன் அவன் அப்படி அறிவித்துகொண்டான் ?  அவன் எப்படி இறந்தான் ? என்றுதான். கோடிக்கணக்கான இனங்கள் கோடிக்கணக்கான அரசர்கள். ஒருவேளை இந்த அரசர்களால் தான் கோடிக்கணக்கான இனங்கள் குழுக்கள் தோன்றியதோ ? . அப்போது பிரிக்கிறவன் தான் அரசனா? .  

 ரஷ்ய கடைசி ஜாரின் மரணமும், ஹிட்லரின் மரணமும், முகலாயர்,ஆங்கிலேயரால்  கொல்லபட்ட அரசர்களின் முகமும் வந்து போகிறது.வெண்முரசில் போகிறபோக்கில் பீமன் தலையில் அடித்து கொன்றவர்களே ஏராளமாய் இருக்கிறார்கள்.பாண்டவர்களின் முதல்  போரே துருபதரை தேர் காலில் கட்டி இழுத்து வருவதுதான். உபப்பில்யாவத்திற்கு சென்று ஒரு கூடை நிறைய மூக்கை அறுத்துக்கொண்டு வந்தவர்கள் .  இது எல்லாம் தர்மருக்கு ஞாபகம் வந்திருக்கும்போல.  ஆனாலும் அரசர்களின் அச்சங்களையும் விழைவுகளையும் அதனால் ஏற்படும் முடிவுகளையும் ஒரு அரசனின் வாயால் கேட்பது  ஒருமாதிரியாகதான் இருக்கிறது. கணிகர் திருதாஷ்டிரருக்கு ஒரு அரசன் எப்படி இருக்கவேண்டும் என வேங்கையின் உறுமல் என கற்பிப்பார். இது அதன்படி நடக்கும் அரசர்களின் முடிவு. ஒன்றை ஓன்று நிகர் செய்கிறது.                                                                                                      

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்