இது நம் வாழ்வில் ஒரு நன்னாள், மூத்தவரே” என்றான். “ஏன்?” என்றான் சதானீகன். “தெரியவில்லை. நமக்கு நலமென்று ஏதும் நிகழவுமில்லை. ஆனால் பிறிதொரு நன்னாள் நமக்கு இனி
வரப்போவதில்லை என்று நிர்மித்ரன் சொன்னான்
இந்த உரையாடல் இனிமையான
ஒரு வருத்ததை அளித்தது. ஏனென்றால் இதேமாதிரியான நிலைமைகள் நம் வாழ்க்கையில் வரும்.
என்ன காரணம் என்றில்லாமல் இதைப்போல ஒருநாள் இனிமேல் வராது என உணர்ந்துவிட்டிருப்போம்
1988ல் நான் லடாக்
போனபோது இதே உணர்வை அடைந்தேன். அன்று நான் இரவில் அழுதேன்
ஆனால் இந்த வரி
இங்கே வேறு அர்த்தம் கொள்கிறது. இவர்கள் எவரும் இனிமேல் நல்லநாட்களைக் காணப்போவதில்லை.
நேராகப்போர்தான் இல்லையா?
மனோகர்