ஜெ,
மாமலரின் உள்ளடக்கம் பற்றி நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். வெண்முரசு முழுக்கவே
மெய்மைக்கான தேடல்தான் நிறைந்திருக்கிறது. ஆனால் பீமனுக்கு அது எவ்வகையிலும் கிடையாது.
அதற்கான தேவையே இல்லை என்பதுதான் அவனுடைய எண்ணமாக இருக்கிறது. தேடிச்செல்கிறான். ஆனால்
அதைவிடப்பெரியது காதல் என்னும் நிலைக்கு வருகிறான்
காதல் என்பது பெண்ணிடம் மட்டும் அல்ல, பெரிய கொள்கையிடமும் பெரிய உள்ளங்களிடமும்கூடத்தான்
என்று அனுமன் சொல்கிறான். அதற்குமாராக மெய்மையைத்தேடிச்சென்றவர்கள் அர்ஜுனனும் தருமனும்
ஆனால் இப்போது வென்முரசு வந்து நிற்கும் இடம் என்னவென்று பார்த்தால் அர்ஜுனன்
தருமான் அவர்களின் மைந்தர்கள் எல்லாருமே அந்தப் பெருங்காதலைத்தான் வந்தாடைந்திருக்கிறார்கள்.
ஞானமேகூட அந்தாக்காதலினால் மட்டுமே கிடைப்பது என தெளிவுகொண்டிருக்கிறார்கள்
சத்யமூர்த்தி