ஜெ
யுதிஷ்டிரரும் திரௌபதியும்
ஒரே மனநிலையில்தான் இருக்கிறார்கள். தங்கள்பொருட்டு மைந்தர்கள் இறப்பதை அவர்களால் தாளமுடியவில்லை.
ஆனால் திரௌபதி அந்தப்போரிலிருந்து தன்னை முழுமையாக விடுவித்துக்கொண்டிருக்கிறார். அது
யுதிஷ்டிரரால் இயலவில்லை. அவர் ஊசலாடிக்கொண்டெ இருக்கிறார். போர் தவிர்க்கமுடியாததாக
ஆகிவிட்ட்து. ஆகவே அதில் ஜெயிக்கவேண்டும் என நினைக்கிறார். அந்த எண்ணம் திரௌபதிக்கு
இல்லை. ஜெயித்தாலும் தோற்றாலும் தனக்கு துயரம்தான் என்கிறாள். திரௌபதியின் இந்த மனமாற்றம்
ஆரம்பம் முதலே உள்ளது. பாரதக்கதை கேட்டிருப்போம். அவள் எப்படி ஐந்து வீடு போதும் என்று
சொன்னதற்கு ஒப்புக்கொண்டாள் என்றெ யோசித்திருக்கமாட்டோம். அவள் இப்படி இருப்பதுதான்
நியாயம் என நினைக்கிறேன்
செந்தில்