அன்புள்ள
ஜெ
செந்நாவேங்கை
வேகமாக கதையோட்டம் கொண்ட நாவல் என ஊகிக்கிறேன். ஆகவே எப்போதும் உதிரி வரிகளை கவனிக்கவேண்டும்
என்று நானே சொல்லிக்கொண்டேன். இதில் சாத்யகியின் பையன்களின் உற்சாகமும் தயக்கம்மும்
அவன் அவர்கள் மேல் வைத்திருக்கும் பதற்றம் மிகுந்த அன்பும் தெரியவருகிறது. அந்த சுவாரசியமான கதையோட்டத்தை தொடர்ந்துசெல்லும்போது
பேச்சில் வரும் வரிகளை விட்டுவிடக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.
இன்றைய அத்தியாயத்திலேயே
சாத்யகி முறைமைகளைப்பற்றி சொல்லும் இடம் முக்கியமனாது நமக்கு சின்னவயதில் முறைமைகள்
என்பவை முக்கியமற்றவை தேவையற்ற சடங்குகள் என்றெல்லாம் தோன்றும். ஆனால் உண்மையில் ஒரு
முறைமை உருவாவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும். அதை எல்லாரும் பொதுவாக ஏற்க எவ்வளவு
தலைமுறை ஆகியிருக்கும். அந்த வகையான முறைமைகள் வழியாகவே சமூகம் என்ற அமைப்பு உருவாகிறது
.
சமூகத்திற்குள் வாழ்ந்தபடி முறைமைகளை மீற எவராலும் இயலாது. ஆகவே மானசீகமாக முறைமைகளை
திட்டிக்கொண்டிருப்பது இரு முதிர்ச்சியில்லாத தன்மை மட்டுமே என்று நினைக்கிறேன். அந்த
இடம் மிக முக்கியமானது. அதை வழக்கம்போல அடிக்கோடிட்டு வைத்துக்கொண்டேன்
சாரங்கன்