Thursday, July 9, 2020

காவியம்


அன்புள்ள ஜெ

வியாசர் தன் காவியத்தை வாசித்து அதில் காவியமாந்தரைக் காட்டுவதும் அங்குள்ளவர்கள் அதில் பாய்ந்து அதன் அடியில்லா ஆழத்திற்குச் செல்வதும் ஏற்கனவே நதிக்கரையில் என்ற கதையில் வந்தது. ஆனால் இந்த அத்தியாயம் மேலும் அழகான சிறுகதை. கங்கை ஒரு சிறுமியாக பிரதீபரின் மடியில் வந்தமர்ந்தது, கங்கை பற்றிய வியாசரின் வர்ணனை ஆகியவற்றை தொடர்ந்து கங்கை காவியமாக மயங்கும் காட்சி வரும்போது அற்புதமான ஓர் ஒருமை உருவாகிறது. காவியம் பிரதீபரின் மடியில் வந்து அமர்ந்ததுபோல தோன்றியது

ஆனால் அத்தியாயத்தின் உச்சம் அதன் சிறுகதை முடிச்சுதான். அது நதிக்கரையில் சிறுகதையில் இல்லாதது. வியாசர் காவியம் எழுதுகிறார். அது அழிவை உருவாக்குகிறது. ஆனால் காவியங்கள் முன்னரே இருந்துகொண்டிருப்பவை. அவை திரும்பத்திரும்பத்தான் எழுதப்படுகின்றன. அப்படி எழுதப்படும் கதையில்தான் என்ன ஒரு ஆழமான விஷயம். அது தான் அத்தனை அழிவுக்கான ஊற்றையும் உருவாக்கியது

 பீமன் கங்கையில் விழுந்து ஆரியகனிடம் விஷம் வாங்கி குடித்தபின்னர்தான் குலாந்தகனாக ஆகிறான். காவியத்திலேயே நாகர்களின் நஞ்சு கலந்திருக்கிறதா என்ன? இக்கங்கையின் ஆழத்தில் இருந்துதான் இவையனைத்தையும் தொடங்கிய முதல்நஞ்சு எனக்கு அளிக்கப்பட்டது

என்று அவன் கேட்கும்போது வியாசரால் மறுமொழி சொல்லமுடியவில்லையே

சிவக்குமார்