Thursday, July 9, 2020

நதிக்கரையில்



அன்புள்ள ஜெ

இன்றைய அத்தியாயம் ஏற்கனவே நதிக்கரையில் என்ற கதையாக வெளிவந்தது. மகாபாரதக் கதைகளை நீங்கள் எழுத ஆரம்பித்திருந்த காலம் அது. பாண்டிச்சேரியிலிருந்து வெளிவந்த கதைசொல்லி என்ற சிற்றிதழில் வெளிவந்தது. அதை கி.ராஜநாராயணனின் பொறுப்பில் பிரேம்- ரமேஷ் நடத்திக்கொண்டிருந்தார் என நினைக்கிறேன். அன்றே இக்கதையை வாசித்துவிட்டேன்

காவியத்தின் எல்லைகளைச் சுட்டும் கதை அது. காவியநாயகர்களின் கதைகள் எப்படி சாமானியர்களின் கதைகளை மறைத்துவிடுகின்றன என்பதைக் காட்டுகிறது. ஒரு அதிர்ச்சியூட்டும் கதையாக அப்போதே இருந்தது. இப்போது வெண்முரசின் இத்தனை விரிவுக்குப்பின்னர் அந்தக் கதை இன்னும் ஆவேசமான ஒரு திறப்பாக ஆகிவிடுகிறது.

ஜெயப்பிரகாஷ்