Friday, July 10, 2020

படிநிலைகள்


அன்புள்ள ஜெ

அஸ்தினபுரி மீண்டும் உருவானபிறகு அங்கே சாதியமைப்பு மிகநுட்பமாக உருவாவதன் சித்திரம் திகைக்கவைக்கிறது. அப்படியென்றால் புதியவேதம் எதைச் சொல்கிறது? அங்கே பிந்திவந்தவர்கள் சொந்த ரத்தமாக இருந்தாலும் தாழ்ந்த சாதி. சாதியடுக்கு இல்லாமல் அந்த சமூகத்தால் செயல்பட முடியவில்லை.

ஆனால் இந்த அமைப்பில் வணிகர்களின் இடம் கொஞ்சம் மேலே இருக்கிறது. இந்தியாவில் மகாபாரதக் காலகட்டத்திற்குப்பிறகுதான் சாதியமைப்பில் வணிகர்களின் மேலாதிக்கம் வந்தது, டி.டி.கோஸாம்பியின் கருத்து. ஆகவேதான் பௌத்தமும் ஜைனமும் வளர்ந்தன. அந்த தொடக்கத்தைத்தான் நாம் அஸ்தினபுரியில் காண்கிறோமா என்ன?

ராமச்சந்திரன்