Friday, July 10, 2020

அடுக்குமுறை


அன்புள்ள ஜெ

அஸ்தினபுரி மீண்டும் ஒருங்கிணைந்து இன்னொரு நகரமாக ஆவதன் சித்திரத்தை வாசித்தபோது புதிதாக என்ன நடந்தது என்றுதான் பார்த்துக்கொண்டே இருந்தேன். புதிதாக ஒரு பொன்னுலகம் எழுந்தது என்று இந்நாவல் சொல்லவே இல்லை. மீண்டும் அங்கிருந்த பொருளாதாரம் சமூகம் ஆகியவற்றின் சூழலுக்கேற்ப ஓர் உலகமே உருவாகி வந்தது என்றுதான் இந்நாவல் காட்டுகிறது.மீண்டும் அதே கதைதான். அதேபோல அதிகரா அடுக்குகள், அதேபோன்ற குலமுறைகள், அதேபோன்ற வர்ணமுறை. ஆனால் அந்த அடுக்குமுறை கொஞ்சம் மாறியிருக்கிறது. புதியசக்திகள் உள்ளே வந்திருக்கின்றன. அதைவிட அது உறையாமல் நெகிழ்ச்சியாக இருக்கிறது. மேலே செல்லமுடியும் என்னும் வாய்ப்பு தெரிகிறது. குபேரரும் பிறரும் அஸ்தினபுரியின் சபைக்குச் செல்லும் அந்த இடம் ஆச்சரியமான ஒரு சமூகச்சித்திரத்தை அளிக்கிறது

 

சந்திரசேகர்