அன்புள்ள ஜெமோ,
இப்போது நீர்க்கோலத்தில்
வந்துகொண்டிருக்கும் தக்காண அரசியலின் ஒரு சித்திரம் முன்பு வண்ணக்கடலில் வந்தது. ஆனால்
அதில் இளநாகன் கிளம்பிச்செல்லும் காலம் எது என்பதே தெளிவாக இல்லை. மிக முந்தையகாலம்.
அன்று தென்மதுரை இருக்கிற்து. ஆனால் மகாபாரதம் நிகழ்ந்துமுடிந்திருக்கிறது. கதைகள்
வந்துகொண்டே இருக்கின்றன.
அவன் சென்றுசேர்வது அஸ்தினபுரியும் அல்ல. ஆனாலும் அந்த அரசியலும்
இப்போது சொல்லப்படுவதற்கும் ஒரு தொடர்ச்சியும் இருக்கிறது என நினைக்கிறேன்
மகாபாரதத்தின்
அரசியலுக்கும் மகாபாரதத் தொன்மத்துக்கும் நடுவே ஓர் ஊடாட்டம் உருவாக்கப்படுகிறது வெண்முரசுநாவல்களில்
என நினைக்கிறேன். ஒருபக்கம் அங்கும் இன்னொருபக்கம் இங்குமாகக் கதை ஓடிக்கொண்டிருக்கிறது
மகாதேவன்