நீர்க்கோலத்தின்
உள்ளடக்கம் இருமுனைகொண்டு செல்கிறது. ஆனால் ஒன்றுக்குள் ஒன்றாக இருகதைகளும் மாறி மாறி
வளர்த்துக்கொள்கின்றன. கதை வாசிக்கையில் அடிக்கடி புஷ்கரனும் உத்தரனும் மாறி மாறி மனதில்
பதிகிறார்கள். உத்தரன் தன்னைப்போன்ற ஒருவனாகவே புஷ்கரனை நோக்குகிறான் என்பது முன்னாடியே
வந்துவிட்டது. பாஞ்சாலியும் தமயந்தியும் ஒன்றுடன் ஒன்று இணைகிறார்கள்
ஆனால் ஆச்சரியம்
என்னவென்றால் நளன் ஐந்துபேராகவும் இருக்கிறான் என்பதுதான்
ராஜேந்திரன