ஜெ
முதற்கனலில் இருந்து
மழைப்பாடலுக்கு இப்போதுதான் வருகிறேன். முதற்கனலில் இருந்து உங்கள் மொழி மாறிவிட்டது.
முதற்கனலில் நிறைய சம்ஸ்கிருத வார்த்தைகள் இருந்தன. ஆனால் மழைப்பாடல் முழுக்கமுழுக்க
தூய தமிழில் இருக்கிறது. முதற்கனலில் கதைகள் எல்லாம் சொல்லப்படுகின்றன. சுருக்கமாக
உள்ளன. மழைப்பாடல் அப்படியே பெரிதாகிறது. முதற்கனலை ஒரு நதியின் தொடக்கம் என்றும் மழைப்பாடல்
அது சமவெளிக்கு வந்து விரிவது என்றும் நினைத்துக்கொண்டேன். முதற்கனலில் உண்மையில் நாவல்
தொடங்கவே இல்லை. மழைப்பாடலில்தான் நாவலின் தொடக்கம் நிகழ்கிறது. குலங்களின் வரலாறு
மண்ணின் சித்தரிப்பு எல்லாம் அதில்தான் ஆரம்பமாகின்றன. மழைப்பாடல் ஒரு டால்ஸ்டாய்த்தனம்
கொண்டு உள்ளது. ஆனால் அபாரமான மாயப்புனைவும் அதில் ஊடுருவியிருக்கிறது
கருணாகரன்