Thursday, July 6, 2017

அசனி தேவன்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

அசனி தேவனின் ஒரு கையில் இடியைக் குறிக்கும் உடுக்கை மற்றொரு கரத்தில் மின்னலைக் குறிக்கும் துள்ளும் மான்.  பேரா இயற்கையினை பெருமான் எனக் கொளல்.  அண்ணலின் காட்சியினை மனம் விரிக்கிறது.  மலைகள் வார்சடை, முகடுகள் இறங்கிப் பொங்கி பெருகும் புனல் கங்கை, மரச்செறிவின் இடையில் கதிரொளி நுதல்விழி, நாகம், யானைத் தோல், புலித்தோல் பல்லுயிர், ருத்திராட்சம் மரங்கள், சாம்பல் காட்டுத்தீ, மானுடன் போல் உருவம் - காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இக்கானகத்தே!

அன்புடன்,
விக்ரம்
கோவை