Sunday, July 2, 2017

பெண் எழும் தருணம்:



மரித்துப் போன தன் மைந்தன் விசித்திர வீரியனுக்காக காசியின் அம்பிகை சிந்தும் கண்ணீரைக் கண்ட சத்தியவதி, பீமன் மீது கொண்ட காதல் உடலெங்கும் ததும்ப வரும் இடும்பியைக் கண்ட குந்தி, இருவரும் தங்களுக்கு வாய்க்கவில்லையே என ஏங்கிய ஒரு தருணம்; தனக்கும் அத்தகைய ஒன்று வாய்க்காது என்று தான் திரௌபதியும் எண்ணியிருக்கக்கூடும். “அறமுணர்ந்தவனோ வில்லெடுத்தவனோ இணைத்தம்பியரோ அல்ல. தந்தையோ உடன் பிறந்தவனோ அல்ல. பீமன் ஒருவனால் மட்டுமே பேரரசியென்று இப்புவியில் நிலை நிறுத்தப்பட்டேன்” – என அவள் உணர்ந்து அவனை எண்ணி விழிநீர் உகுத்த கணத்தில் அவளுக்கு வாய்க்கிறது. ஆம், உடைந்து பெருக்கிய கற்கள் அல்ல, எங்கிருந்தோ வந்த அந்த பெரும்பாறை தான் அவளை பெண்ணாக்கி இருக்கிறது. (மாமலரில் முண்டன் ஆடும் கழங்குகள்!!) சிமிழில் இறுக்கி மலரை மூடலாம், மணத்தை மூட இயலுமா என்ன? மாமலர் இங்கு தான் நிறைவடைந்திருக்கிறது. 


அருணாச்சலம் மகராஜன்