Sunday, July 2, 2017

பெண் கதாபாத்திரங்களின் உரையாடல்


வணக்கம்.. வெண்முரசு தொடர்ந்து வாசிக்கிறேன்..

இன்றைய பகுதி என்னை மிகவும் பாதித்தது.. உங்களுடைய வார்த்தைகளை என்றும் ரசித்தாலும், பெண்மையின் மன உணர்வுகளை விவரிப்பதில் நீங்கள் மிக உயர்ந்த தளத்தில் நிற்கிறீர்கள்.. வெறுமனே புகழ்ச்சி இல்லை.. தொடர்ச்சியாக பெண் கதாபாத்திரங்களின் உரையாடல், அவர்களின் மன உணர்வுகள் வெளிப்படுவது என்று நுண் உணர்வுகளை உங்கள் வார்த்தைகளின் வழி அழகாய் வெளிக்கொண்டு வருகிறீர்கள்.. தேவயானியின் கதை, அதன் உச்சம்..

எனக்கு பிடித்தவற்றை இங்கு குறிப்பிடுகிறேன்..

ஒரு பெண்ணென முற்றுணர்வது ஆண் ஒருவனுக்காக தனித்திருந்து விழிநனைகையில்தான் போலும். அவன் ஒருவனுக்காக அன்றி தன் உள்ளம் நீர்மை கொள்ளப்போவதில்லை


பெண்கள் விழைந்ததுபோல் வாழ்க்கை அமைவது மிக அரிது. விரும்பாத வாழ்க்கையை எண்ணத்திலிருந்து முற்றிலும் வெட்டி விலக்கிக்கொள்ளும் பெண்ணே மகிழ்ச்சியுடன் வாழலாகும்


பற்றி ஆட்கொண்டு கசக்கி முகர்ந்து துய்த்து துறந்து செல்லுதல். எச்சில் இலையென பெண்ணை உணரச்செய்தல்” என்றாள்.


இவற்றைப் படிக்கும் போது, அன்னையென உணர்ந்து, உங்களை ஆசிர்வதிக்க வேண்டும் போல் உள்ளது.. வாழ்க.... 

பவித்ரா..