Saturday, July 16, 2016

சிறியதருணங்கள்



அன்புள்ள ஜெ

குந்தியின் கண்ணீர் என ஒரு கடிதம் வாசித்தேன். நுட்பமான வாசிப்பு அது. அந்தக்காட்சி எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதில் சகதேவனை தன்னுடன் வைத்துக்கொண்டு குந்தியும் விதுரரும் சந்திப்பார்கள். பையன் வளர்ந்துவிட்டான். அவனால் எல்லவற்றையும் உணரமுடியும் என அவர்களுக்கே தெரியும். ஆனாலும் அவனை கூடவே வைத்திருப்பார்கள். ஏனென்றால் ஒன்று அவதூறு வரக்கூடாது என்ற எச்சரிக்கை.

அதோடு ஓரளவு அவனுக்கும் தெரியட்டுமே என்ற மனநிலை. இதை நான் பல தருணங்களில் சொந்தமாகவே கண்டிருக்கிறேன். எப்படி என்று உணரமுடியவில்லை. ஆனால் இது வாழ்க்கையிலே நடக்கும் விஷயம்

வெண்முரசு பல உக்கிரமான தருணங்களை சொல்கிறது. ஆனால் இந்தவகையான சின்னச்சின்ன வாழ்க்கை தருணங்களும் நிறைந்து காணப்படுகிறது. நான் அதைத்தான் கூர்ந்து வாசிக்கிறேன் என்று எனக்குப்படுகிறது

ப்ரியா