Tuesday, July 26, 2016

ஆழம்



ஜெ

துரியோதனன் பீஷ்மரிடம் அடிபடும் காட்சியை அவன் தந்தையிடம் அடிபடும் காட்சியுடன் ஒப்பிட்டுப்பார்த்தேன். பீஷ்மர் ஒரு திறமையான போர்வீரர் போல அடிக்கிறார். திருதராஷ்டிரர் மூர்க்கமாக அடிக்கிறார். இவர் சிங்கம்போல. அவர் யானைபோல

ஆனால் திருதராஷ்டிரரும் பீஷ்மரும் இருவருமே அவனை அடிப்பதற்குக் காரணம் ஒன்றே. அது அவன் மீதான கோபம் அல்ல. தன் மீதான கோபம். ஆற்றாமை என்றும் சொல்லலாம். அவனை அடித்து தன் குற்றவுணர்ச்சியை ஜெயிக்க முயற்சி செய்கிறார்கள்.

இருவருக்குள்ளும் முள்ளாகக் கிடப்பது அவர்கலின் தப்புதான். வாரணவதம் எரிப்பில் மௌனமாக தெரியாதவனாக இருந்தது திருதராஷ்டிரனை கஷ்டப்படுத்துகிறது. இங்கே சபையில் சும்மா இருந்தது பீஷ்மரை கஷ்டப்படுத்துகிறது.

சித்ரா