Tuesday, July 12, 2016

பீமனின் மொழி



ஜெ

பன்னிருபடைக்களத்தின் உச்சம் என்பது பீமனின் சபதம். ஆவேசமான  rhetoric குடன் அமைந்துள்ளது அது. அதில் பீமன் தனக்கே , தங்கல் குலத்துக்கே சாபம் விடுகிறான். எப்போதுமே நான் இதைக் கவனித்திருக்கிறேன். அன்றாடவாழ்க்கையிலேகூட பொதுவாக ஒரு விஷயம் காலத்தை நோக்கிச் சொல்லப்படும்போது, ஒரு சாபமாகவோ சவாலாகவோ வெளிப்படும்போது அதில் இயல்பாக ஒரு ஓங்கிய மொழி இசையுடன் வந்து அமைந்துவிடுகிறது

பீமன் சொல்லில் வரும் ‘பெண்பிழை செய்தோர் பிள்ளைத்துயர்கொண்டழியவேண்டுமென்பதே பெருநெறி’ என்பது ஒரு மகத்தான வரி

சுந்தரேசன்