Sunday, July 17, 2016

குருதிப்பலி



ஜெ

வெண்முரசின் பழைய அத்தியாயங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். பிரயாகையில் பீமன் இடும்பவனத்தில் எருமையைவெட்டும் காட்சியைக்கண்டு மயங்கிவிழுகிறான். எருமை மிகக்கச்சிதமாக வெட்டப்படுவதன் வர்ணனையும் உள்ளது

ஆனால் அந்தப்பீமன் தான் ‘நான் காட்டாளன்’ என்று இங்கே அறிவிக்கிறான். துச்சாதனனின் நெஞ்சு பிளந்து குருதியைக்குடிப்பான் என்று அறிவிக்கிறான். சொந்த சகோதரனின் ரத்தம் அது.

இந்த மாற்றத்தின் கதைதான் இதுவரைக்கும் வந்தது என நினைக்கிறேன்.

மிக்க நன்றி.
மணிகண்டன்