Wednesday, July 27, 2016

திருதராஷ்டிரனின் கொடை



ஜெ

திருதராஷ்டிரரின் மூர்க்கமான பேரன்பும் நீதியும் வெளிப்படும் இடம் முக்கியமானது. ஆனால் ஊசலாடுவது ஒவ்வொன்றும் எதிர்ப்பக்கமே செல்லும் என்னும் ஒற்றைவரி மூலம் அவரை மூன்னாடியே ஊகிக்கவைத்துவிட்டு மேலெ செல்கிறீர்கள்.

திருதராஷ்டிரர் மூன்றுமுறை நாட்டை பாண்டவர்கலுக்கு திருப்பிக்கொடுத்தார் என்றும் மூன்றுமுறையும் திரும்பி வந்து சூதாடி மூன்றுமுறையும் தோற்று கடைசியில்தான் தர்மர் காட்டுக்குச் சென்றார் என்று வியாசபாரதத்தில் உள்ளது. அது நம்பமுடியாத அசட்டுக்கதை என்றெ தோன்றியது

ஆனால் அதை புரானம் என்பதனால் குறியீடாக எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் எப்படி எடுத்து விளக்குவீர்கள் என்று அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்


மகேஷ்