Monday, July 18, 2016

வேர் நாகம்



ஜெ

அலையும் வேர்களும் நெளியும் நாகங்களும் பற்றி ஒரு நண்பர் எழுதியிருந்தார். முக்கியமான அப்சர்வேசன் அது. நானும் அதேபோல தோராயமாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அந்தக்கடிதத்தை வாசித்தபின் அப்பகுதியைச் சென்றுவாசிக்கும்போது மேலும் மேலும் நுட்பமான வாசிப்புக்கான இடங்கள் அதில் உள்ளன என்று தோன்றியது

உலூபியின் குணச்சித்திரமும் நாகமும் இணைகின்றன. அவள் உறுதியானவளாகவும் அர்ப்பணிப்புள்ளவளாகவும் காணப்படுகிறாள். அவளுடைய அந்த இயல்புதான் அந்தப்படிமம். அது அர்ஜுனனைப்பெண்ணாக ஆக்குகிறது.

ஆனால் சித்தாரங்கதை அலையும் இயல்புள்ளவள். அவள் மனம் வேரில்லாது நீரில் நீந்தும் உலகம் போல உள்ளது. ஆகவே அவள் அர்ஜுனனை மீண்டும் ஆணாக ஆக்குகிறள்

தப்பான வாசிப்பாகக்கூட இருக்கலாம். ஆனால் அந்த இரண்டுபகுதிகளும் வெவ்வேறு வகையிலே வாசிக்க ஆழமான மனத்தூண்டுதலை அளிக்கின்றன

ராஜாராம்