Wednesday, July 27, 2016

மாற்றம்

மானுடர் அக்கணத்துக் காற்றுக்கேற்ப வடிவம் அமையும் அகல்சுடர் போன்றவர்கள்.   அவன் கண்ட அந்த ஒரு தோற்றத்திற்கு முன் குனிந்து தலைகொடுக்கையில் அவன் அவரது அத்தனை தோற்றங்களுக்கும் தன்னை அளிக்கிறான்.



ஜெ

வெண்முரசின் முக்கியமனா வரிகளில் ஒன்று இது. மகாபாரதம் முழுக்க் ஒரு குறிப்பிட்ட விஷயம் தென்படுகிறது. அது கதாபாத்திரங்களின் மாற்றம். அத்தனை அறம் பேசும் பீஷமர் ஏன் பாஞ்சாலி அவமானப்படுத்தப்பட்டபோது சும்மா இருந்தார் என்பதில் ஆரம்பித்து அத்தனை கேள்விகளும் இந்த விஷயத்திலிருந்து எழுபவைதான்

இதே கேள்வியை அனைவரைப்பற்றியும் கேட்கமுடியும். மனிதர்கள் மெதுவாக மாறிக்கொண்டிருப்பதைத்தான் மகாபாரதம் காட்டுகிறது. மூலமகாபாரதத்தில் அந்த மாற்றம் தாவித்தாவி வருகிறது.திருதராஷ்டிரனில் உள்ள மார்றங்களை மூலத்தில் தொகுக்க முடியாது. சீராக இருக்காது

அதையெல்லாம் சீராக ஆக்குவதே வெண்முரசின் வழியாக இருக்கிறது. அவ்வாறு மாறும் மானிடரை நம்பி உறுதியான எப்போதைக்கும் உரிய முடிவுகளை எடுப்பது எவ்வளவு பெரிய மூடட்தனம்



சாரதா