Thursday, July 14, 2016

நீலம் ஒரு பாடல்



அன்புள்ள ஜெமோ

நேற்று நீலம் வாசித்துக்கொண்டிருந்தேன். அதன் சொற்கள் வழியாக மனம் ஓடுவது ஒரு தியான அனுபவம் போலிருந்தது. வாசிக்கும்போது அர்த்தத்தை மனம் எடுத்துக்கொண்டிருக்கிறது. புரிந்துகொண்டிருக்கிறது. அந்த புரிந்துகொள்ளுதல் நடக்காமல் ஒரு அனுபூதிநிலை மொழியிலேதான் நிகழ்கிறது. கவிதைகளில் அது அடிக்கடி நிகழும். அந்த கவிதானுபவம் நீலத்தில் இருக்கிறது

நீலத்தில் உள்ள உணர்ச்சிகள் எவையும் உண்மையில் அன்றாட வாழ்க்கையில் இருப்பவை அல்ல. அவை உலகம் சார்ந்தவையே அல்ல. ராதையின் உணர்ச்சிகளை நாம் ஆன்மிகமாக எடுத்துக்கொண்டாலொழிய அவற்றை பித்து என்றுதான் சொல்லமுடியும்.

அந்தப்பித்துநிலையை  மொழி பித்துகொள்ளும்போதுதான் உணர்த்தமுடியும். அதை சொல்லுவது சாத்தியமில்லை. அதைபாடத்தான் முடியும். நீலம் ஒரு பெரிய பாடல் என்று நினைக்கிறேன்

நீலத்தின் சொல்லழகில் இருந்து வெளியே வருவதே சாத்தியமில்லை என்று படுகிறது

எஸ்.