Saturday, July 16, 2016

விஸ்வரூபன்



ஜெ

நீலம் பற்றித்தான் நிறையபேர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பலரும் பன்னிரு படைக்களம் முடிந்ததும் நேராக நீலம் அல்லது இந்திரநீலம்தான் வாசிக்க ஆரம்பித்தார்கள் .என்ன காரணம் என்றால் பன்னிரு படைக்களத்தின் சிகரமான இடம் கிருஷ்ணனில் வந்து முடிகிறது என்பதுதான்/ ஆனால் கிருஷ்ணன் போதுமான அளவுக்கு வரவும் இல்லை. அவனை எதிர்பார்ப்பதற்கான தாகம் உருவாகிவிட்டது

நானும் கிருஷ்ணனைத்தான் தேடினேன். நான் அவன் இளைஞனாக வந்து குந்தியைக் கொஞ்சும் காட்சியையும் இனிப்பைச் சப்பியபடி கழுத்தறுத்துக்கொல்லும் போர்க்களக் காட்சியையும் மீண்டும் வாசித்தேன். அந்தக் கிருஷ்ணன் அப்படியே இப்போது வரும் கிருஷ்ணன் என்பது ஆச்சரியம்

விச்வரூபனாகத்தான் ஆரம்பம் முதலே வந்திருக்கிறான். அவ்வப்போது மறைந்துகொண்டே இருந்திருக்கிறான் அவ்வளவுதான்

சாரதி