Friday, July 22, 2016

உபநிடதக் கணம்






ஜெ


உத்தாலகர் விவசாயம்செய்பவராகவே கடைசிவரை இருக்கிறார். அவரது வேதம் உழைப்பாளியின் வேதம். மகன் அறிஞனாகிறான். அறிஞனாக மட்டுமே வாழ்கிறான். அவனுடையது வேறு ஒரு வேத தரிசனம். ஆனால் இருவருமே கடைசியில் அரசனிடம் சென்று வேதமெய்ப்பொருளை அறிய நேர்கிறது. 

உத்தாலகரிடம் திரும்பி ஸ்வேதகேது வரும் இடம் முக்கியமானது. அவன் உழைப்பை ஏற்கிறான். உத்தாலகர் வயலை அடைத்துக் கற்றவற்றை இவன் வயலை திறந்து கற்றுக்கொள்கிறான். ஆனால் சேறு பொதுதான்.

சாந்தோக்கிய உபநிஷத்தின் தருணம் உத்தாலகர் ஸ்வேதகேதுவின் அகங்காரத்தை அடக்குவது. அந்த நிகழ்ச்சிக்கு இத்தனை நிறங்களை ஏற்றியிருக்கிறது வெண்முரசு

அருணாச்சலம்