Tuesday, July 12, 2016

அவையின் கண்கள்



ஜெ

பன்னிருபடைக்களத்தின் இறுதிக்காட்சியில் திரௌபதியின் வஸ்திராபகரணக்காட்சியும் அதில் பீமனின் பேச்சும்தான் உணர்ச்சிகரமக வாசிக்கப்பட்டன. அது இயல்பாக வாசிப்பதுதான். அது மேலோங்கி நிற்கிறது

உள்ளடங்கி இருப்பது, இன்னும் முக்கியமானது, அங்கே இருந்த குடிமக்களின் எதிர்வினை. பாஞ்சாலி அவமானப்படுத்தப்பட்டதை வாசிக்கும் எவரும் அந்த சபையில் இருந்த மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று சிந்தித்திருக்கமாட்டார்கள். பாஞ்சாலி சபதம் போன்ற நவீனக் காவியங்களை வாசிக்கையிலேயே நாம் அதை எண்ணிப்பார்த்திருக்கமாட்டோம்

துரோணரும் பீஷ்மரும் கிருபரும் அமைதியாக இருந்ததற்குக் காரணம் அவர்கள் அரசதர்மத்துக்குக் கட்டுப்பட்டவர்களாக உணர்ந்தனர் என்பது வெண்முரசில் வருகிறது. ஒரு மிகச்சிறப்பான விளக்கம் அது

ஆனால் மக்கள் அப்படி அல்ல. பல தருணங்களில் அவர்கள் அறத்தின் குரலாக ஒலித்திருக்கிறார்கள். மொத்த சபையும் அரசனுக்குக் கட்டுப்பட்டதாக இருந்தாகவேண்டியதில்லை.

அவர்கள் எல்லாரும் ஆண்கள். அனைவரும் அந்தத்தருணத்தில் துரியோதனனின் மறுவடிவங்களாகவே ஆகிவிட்டனர். அவர்களுக்குள் இருந்த இருட்டு வெளியே வந்தது. அந்த நுட்பம் விளக்கப்பட்டிருக்கும் விதமே கூரிய வாசிப்புக்குரியது. அவர்களின் உள்ளங்களின் ஓட்டம் மிக நுட்பமாக இருந்தது

சமீபத்தில் சுவாதி என்ற பெண் கொல்லப்பட்டபோது அந்த நிர்வாணத்தை பகிர்ந்த இதழ்களும் அந்த இதழ்களை வெறிக்க வாசித்த மக்களும் நினைவுக்கு வந்தனர். காலம் கடந்த மனநிலை

மகேஷ்