Thursday, July 21, 2016

வேதச்சொல்



ஜெ

சிறப்பாக ஆரம்பித்திருக்கிறது சொல்வளர்காடு. கௌஷீதகி ஆரண்யம் பிறந்த காட்டில் இருந்து. ஆனால் மிகச்செறிவாக உள்ளது. இந்த நாவல் தத்துவம் சார்ந்ததாக இருக்குமென ஊகிக்கிறேன். ஆனால் என்றவகையில் உரைநடை அமையும்போது அதைமுழுக்க வாசித்துப்புரிந்துகொள்வது கொஞ்சம் கடினம். இந்த வரியில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பது பதம் கிரமம் ஜடை கனம் என சொல்லப்படுவதெல்லாம் என்ன என்று முன்னாடியே தெரிந்துகொள்ளாதவர்கள்க்கு ஒன்றும் புரியாமல்தான் இருக்கும் என நினைக்கிறேன்

சொல்தொகையென பதமும், சொல்லிணைவு என கிரமமும், சொல்பின்னுதல் என ஜடையும், சொல்கூட்டல் என கனமும் நெறிவகுத்தமைக்கப்பட்டன. அவை காலைநதியை கதிர்களென வேதங்களை ஊடுருவிச்சென்று ஒளியுறச்செய்தன.

என்றவகையில் உரைநடை அமையும்போது அதைமுழுக்க வாசித்துப்புரிந்துகொள்வது கொஞ்சம் கடினம். இந்த வரியில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பது பதம் கிரமம் ஜடை கனம் என சொல்லப்படுவதெல்லாம் என்ன என்று முன்னாடியே தெரிந்துகொள்ளாதவர்கள்க்கு ஒன்றும் புரியாமல்தான் இருக்கும் என நினைக்கிறேன்

சுவாமி