Wednesday, July 13, 2016

ஐந்து பெண்கள்



அன்புள்ள ஜெ

வெண்முரசின் சித்தரிப்புகளை மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிரேன். இப்போது வாசிப்பது வெண்முகில்நகரம். திரௌபதியின் திருமணத்துக்குப்பின்னால் அவளுக்கும் பாண்டவர்களுக்கும் நிகழும் உறவுகளை நீங்கள் சொல்லியிருக்கும் விதத்தை ஆரம்பத்தில் எளிதாகக் கடந்துசென்றுவிட்டேன். இப்போது வாசிக்கும்போது இரண்டு கதையடுக்குகளால் அவை அமைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறேன். ஒன்று, விறலி சொல்லும் கதை. இன்னொன்று, அவர்கள் பேசிக்கொள்ளும் கதை. அந்தக்கதைகளுக்குள் நுட்பமான ஒற்றுமை உள்ளது. அவை அந்த உறவைச் சுட்டிக்காட்டுபவை. அவற்றின் அர்த்தங்களை விரிவாக்கிக்கொண்டே செல்லலாம்.

ஒருகதை அப்படியே ஈடிபஸ் காம்பிளெக்ஸ் கதை. அத்தனை கதைகளும் ஆண்பெண் உறவின் குறியீடுகள். திரௌபதியை ஒரு தெய்வமாக எண்ணிக்கொள்ளாவிட்டால் அந்த அத்தியாயங்களை ஒவ்வாமை இல்லாமல் கடந்துசெல்ல முடியாது. அந்த தெய்வம் பலபெண்களின் தொகுப்பு. ஒவ்வொரு உறவிலும் ஒவ்வொரு பெண் வெளிப்படுகிறாள். அந்த ஐந்துமுகமும் ஐந்து சாத்தியங்கள். அங்கிருந்து வாசித்துக்கொண்டே வந்தால்தான் பன்னிருபடைக்களம் வரை வந்துசேரமுடியும் என நினைக்கிறேன்

மகாதேவன்