Tuesday, July 19, 2016

விதி



ஜெ

மழைப்பாடலில் இரு இடங்கள் நினைவுக்கு வருகின்றன. ஒன்று விதுரர் இளைஞனாக அஸ்தினபுரிக்குள் சுற்றி வருகிறார். அப்போது அங்கே நாண் ஏற்றப்பட்டு நின்றிருக்கும் பிரம்மாண்டமான தானியங்கி அம்புகளையும் விற்களையும் பார்க்கிறார். அவை காலாகாலமாக போருக்காகக் காத்து நின்றிருக்கின்றன. அஸ்தினபுரிஒரு பெரிய போருக்காக ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறது என்பதை அப்போதே சொல்லிவிட்டீர்கள்

அதேபோல காந்தாரி நகர்நுழைவதற்கு முன்னால் ஒரு பெரிய ரத்தமழையே நகர்மேல் பெய்கிறது. பதினாறு உருத்திரர்களின் கோயிலில் இருந்து அந்த ரத்தமழை வருகிறது. நிகழப்போவது என்ன என்பது தெளிவாகவே சொல்லப்பட்டுவிட்டது

ஆனால் அதற்கான காரணம் இப்போதுதான் உருவாகிறது. உடனடிக்காரணம் பாஞ்சாலி ஆடை அகற்றப்பட்டது. பெரிய காரணம் புதியவேதத்தின் பிறப்பு. அதாவது விதி முன்னால் சென்றுகொண்டிருக்கிறது.

ஒவ்வொன்றையும் வெண்முரசு முன்னரே தெளிவாகத் திட்டமிட்டிருக்கிறது

ராஜாராம்