Tuesday, July 12, 2016

பீஷ்மரின் உள்ளம்



ஜெ,

வெண்முரசின் முதற்கனலில் பீஷ்மரின் குணச்சித்திரம் வருகிறது. அவர் அஸ்தினபுரியின் அரசு உறுதியாக இருப்பதற்காக தன்னையே தியாகம் செய்யத்தயாராக இருக்கிறார். தன் குடி அழிவதைக்கூட அவர் பொருட்படுத்தவில்லை. அஸ்தினபுரி போன்ற வலிமையான ஷத்ரிய அரசுகளே தேவையானவை என நினைக்கிறார்

அவர் சத்யவதியிடம் பேசும்போது ‘பொன்னின் காலம் வந்துவிட்டது, இரும்பின் காலம் அழிகிறது’ என்று சொல்கிறார். ‘வாள்வலிமை’ குன்றி ‘பொருள்வலிமை’ மேலோங்குவதையே அப்படிச் சொல்கிறார். அவ்வாறு ஒரு புதியகாலம் வரும்போது அதை எதிர்த்து அஸ்தினபுரி வலிமையுடன் நிற்கவேண்டும் என்கிறார்

அவர் செய்யும் அனைத்துச்செயல்பாடுகளும் அந்த நோக்கிலேயே அமைந்துள்ளன. ஆகவே சபையில் அவர் ஏன் திரௌபதி அவமதிக்கப்பட்டதை பார்த்துப்பேசாமலிருந்தார் என்பதற்கான விளக்கம் அதுவே. அவர் ஷத்ரிட அரசுகள் உறுதியாக நிற்கவேண்டுமென விரும்பினார். புராணங்களில் இந்த விளக்கம் இல்லை. வரலாற்றுபூர்வமான இந்த விளக்கம் மிகச்செறிவாக உள்ளது

சாரதா