Thursday, July 12, 2018

வரிகள்



ஜெ

யுயுத்ஸு பற்றுக்களைக் கைவிட்டுச் செல்கிறேன் என்று சொல்லும்போது குண்டாசி அதை கிண்டல் செய்து இவ்வாறு சொல்கிறான். இயல்பிலேயே பற்றுக்களை விட்டவர்கள்தான் பற்றறுத்து செல்லமுடியும். பற்று கொண்டவர்கள் அதை விடமுடியாது என்கிறான்

நிலைகுலையாத ஒருவர் இப்புவியிடம் என்ன சொல்கிறார்? இங்குள்ள எதுவும் என்னை தொடாது என்றா? இல்லை, இங்குள்ள எதனுடனும் எனக்கு கடப்பாடில்லை என்று. 

இந்தவகையான கருத்துக்களை தனிவரிகளாகப் பார்க்காமல் வெண்முரசு உருவாக்கும் ஒட்டுமொத்தமான விவாதத்தின் ஒரு பகுதியாக மட்டுமே பார்க்கவேண்டும் என நினைக்கிறேன். வெண்முரசு இதற்கு நேர் எதிரான கருத்தைக்கொண்ட இன்னொரு கதாபாத்திரத்தையும் உருவாக்கியிருக்கும். குண்டாசி பற்றில் சிக்கி அழிபவன். அவனால் அப்பாடித்தான் சொல்லமுடியும்

இளைய யாதவர் சொல்லும் வரிகள் மட்டுமே கோட் பண்ணுவதற்குரியவை என்பது என் கருத்து. அவை மட்டுமே மறுக்கப்படாமல் இந்நாவலில் வருகின்றன

ஜெயக்குமார்