Friday, July 13, 2018

குண்டாசியும் விகர்ணனும்




ஜெ

குண்டாசியும் விகர்ணனும் உரையாடிக்கொள்ளும் காட்சி அரிய ஒன்று. விகர்ணன் முதலில் நிலையான முடிவுக்கு வந்துவிட்டவனாகவும் தெளிவானவனாகவும் தெரிகிறான். ஆனால் அவன் தெளிவானவன் அல்ல. யுயுத்ஸு தெளிவாக இருப்பது அவனுக்குக் கஷ்டமாக இருக்கிறது. அவனிடம் பூசலிடப்போகிறான். அவனால் மனம் உடைகிறான். குடிக்கிறான். தன் முடிவு சரிதானா என்று அலைக்கழிகிறான். ஆனால் குண்டாசி தெளிவில்லாமல் அலையடிக்கிறான். தெளிவை வந்தடைந்துவிடுகிறான். ஒரு ஊஞ்சல் நின்றுவிடும்போது இன்னொன்று ஊசலாட ஆரம்பிக்கிறது. அந்த உணர்ச்சிக்கொந்தளிப்பான உரையாடல்கள் வெண்முரசின் உச்சங்கள் என நினைக்கிறேன். அந்தப்பகுதிகளை ஒரு சின்ன இடைவேளைக்குப்பின்னால் மீண்டும் வாசிக்கவேண்டும்

ஜெயக்குமார்