Saturday, July 21, 2018

குண்டாசி



ஜெ,


முன்பு ஆங்காங்கே சொல்லிவைக்கப்பட்ட அத்தனை குறியீடுகளும் வளர்ந்து வளர்ந்து வந்து பெரிய அர்த்தங்களை அளிப்பதை வெண்முரசிலே பார்க்கமுடிந்தது. அஸ்வதந்தம் இப்படி விஸ்வரூபம் கொள்ளும் என நினைக்கவே இல்லை. அதேபோல பல கதாபாத்திரங்களின் வளர்ச்சி. குண்டாசி ஒரு வலிமையான கதாபாத்திரம். ஆனால் அவனுடைய அந்த இறுதி விடைபெறல் அழகான ஒரு முத்தாய்ப்பாக அமைந்திருந்தது. இருளில் இருந்து ஒளியை நோக்கிச் செல்பவனாகவே அவன் எனக்குத்தெரிகிறான்

ராமச்சந்திரன்