Monday, July 16, 2018

மழைப்பாடலில் சகுனி



ஜெ ,


மழைப்பாடலில் சகுனியின்  பாத்திரம் வர துவங்கும் போதே அவன் பெரிய பெரிய கட்டிடங்களை உருவாக்கும் சித்திரம்  வந்து விடுகிறது , அந்த கட்டிடங்கள் அங்கு தேவையற்றவை , இருப்பினும்  கட்டுகின்றான் எனும் சித்திரம் வருகிறது , அவனது அதிகார வேட்கை க்கு அந்த நிலம் போத வில்லை என்பதை இந்த சித்தரிப்புகள்  சொல்கின்றன  என உங்கள் அயன் ராண்ட் கட்டுரைகள் படித்த போது தோன்றியது . ஆனால் சகுனிக்கு  அதிகாரம் மீது அமரும்  ஆசையில்லை  , தன் எல்லைகளை  விரிவாக்கி கொள்வது மட்டுமே விருப்பம் , அதாவது மத்தகம்  மீது அமர்பவனாக  அல்ல , தன் துருத்தியால்  யானையை  கட்டு படுத்தும் பாகன்  போன்றதொரு  அதிகாரம் . தன் முனைப்பற்ற  அதிகார மனநிலை என சொல்லலாம் , அதனால்தான் பாரத நிலபரப்பின் மன்னனின்  மாமனாக  எனும் அர்த்தத்தில் பீஷ்மர் காந்தாரியை திருதராஷ்டினன்க்காக  பெண் கேட்கும் போது சொன்னதில் மனம் சாய்ந்தான்  ..

ராதாகிருஷ்ணன்