Friday, July 13, 2018

படிமங்கள்



அன்பு ஜெ,


    "செந்நாவேங்கை _36" பல விநோத வரிகளினூடாக இயற்கையின் விரிவை தங்களின் எழுத்தினில் ரசித்தேன். கொற்றவையின் பூசனைக்காகச் செல்லும் "குண்டாசி" அதற்காக அமைக்கப்பட்ட படிகள் ,வழிகள் உருமாறினதை , மழை வெயிலால் அலையடிக்கப்பட்டு , பழையபடி கரும்பாறைகளாக மாறியது என்றும் ,கைகளால் தடவி தடவி காலமின்மைக்கே கொண்டுச் சென்றது என்று வியப்பதாக வந்துள்ளது.சிதிலமடைந்தது என்ற சொல்லுக்கு எதிரான கவித்துவமான இவ்வரிகள் அழகாய் மிளிர்கின்றது.இவ்வழகமையினாலே தங்களால் திருதாவையும் ,துரியனையும் அழகாகவே காட்ட முடிகிறது.
      

  மேலும் ஒரு வரி.பசுமையின் கல்வடிவான அன்னை. பூத்துக்குலுங்கி ,கனிந்து உதிரும் பசுமைக்கு எதிராக , பசுமையே இறுகி கருமைக்கு அருகே சென்று பசுங்கல்லாக விற்றிருக்கும் கொற்றவையை ரசிக்கும் ,அவன் வாயிலாக எங்களுக்கும் சொல்லொன்னா நெகிழ்வை ஏற்படுத்தியது தங்களது வரிகள்.
          

மூன்றவதாக _ தன்னிலெழுந்த அனைத்தும் தன்னடையே வீழ்வதற்கு காத்திருக்கும் ஐம்பூதங்களில் அமைதியான "மண்" என்று குறிப்பிட்டிருப்பது. கரிய ஓசையற்ற ஆழமென்னும் வரிகள் , குருஷேத்திரப்போருக்கென தயாராகி வரும் படலமாகவே தோன்றச்செய்கிறது.
அன்புடன்,



செல்வி அ.
கடலூர்.