Sunday, July 22, 2018

இருள்




ஜெ

கௌரவர்கள் போருக்குக் கிளம்பியபோது பானுமதி உதயத்துக்காக ஏங்குவதும் சூரியனை வேண்டிக்கொள்வதும் பெரிய மன எழுச்சியை அளித்தன. அவள் அப்போது அழுதிருந்தால்கூட அத்தனை வருத்தம் ஏற்பட்டிருக்காது. அப்போது எனக்கு ஏற்பட்டது ஒரு பெரிய வெறுமைதான். என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அதை வாசித்துக்கொண்டிருந்தேன். 


ஒளிர்பவனே! அனைத்தையும் ஒளிரச் செய்பவனே! இத்தருணத்தில் உன் அருளில் ஒரு சிறுதிவலை என் மீது தெறிக்கட்டும். உன் நோக்கின் ஒருகணம் எனக்கு அருளப்படட்டும். இத்தருணம் எழில் கொள்ளட்டும். இதிலிருந்து நான் மீண்டெழுந்து இனியொரு வாழ்வை கடக்க வேண்டும். நான் செல்லும் பாதைகள் அனைத்திலும் ஒரு கூழாங்கல்லேனும் விழியொளி கொண்டிருக்க வேண்டும். இறையுருவே, அலகிலா வெளியின் அழகிய மைந்தனே, எனக்கருள்க! இத்தருணத்தில் இங்கெழுந்தருள்க!” 

--என்று அவள் வணங்கியபோது எனக்கு அழுகையே வந்துவிட்டது. நானும் எவ்வளவோ சந்தர்ப்பங்களில் என்ன என்றே தெரியாமல் பொழுதுவிடியவேண்டும் என்று வேண்டிக்கொண்டிருக்கிறேன். பொழுதுவிடிந்தால் எல்லாமே சரியாகிவிடும் என்று நினைத்திருக்கிறேன். பெண்களுக்கு இரவுகள் மிகவும் துன்பமானவை என தோன்றுகிறது

ராஜி