Sunday, July 15, 2018

விகர்ணன்



செய்யவேண்டியதை செய்ய இயலாதவனே மிகுதியாக எண்ணம் ஓட்டுகிறான். நூறு ஆயிரம் செவிகளுக்குமுன் தன்னை மீளமீள முறையிடுகிறான். நூறு கோணங்களில் தன் தரப்பை முன்வைக்கிறான். அவ்வாறாக அவன் மெதுவாக தன்னை நிறுவிக்கொள்கிறான்  - பொட்டில் அடித்தது போன்ற வரி.விகர்ணன் முதலில் கௌரவர்களுடன் நின்று செஞ்சோற்றுக் கடனுக்காகப் போர்புரிவதாகச் சொல்லும்போது மிகுந்த தெளிவுடன் பேசுகிறான். அந்தத்தெளிவு பொய்யானது. ஏனென்றால் அது அவனே தனக்குள் சொல்லிச் சொல்லி உறுதியான சொற்களாக ஆக்கிக்கொண்டது. ஆகவேதான் அவன் மது அருந்தியதுமே கொந்தளிக்கிறான். தான் செய்வதை வலிந்து நியாயப்படுத்திக்கொண்டவனின் சோர்வு அது.

ராஜசேகர்