Friday, July 13, 2018

போருக்கு முன்




ஜெ

நானும் என் நண்பர்களும் வெண்முரசை வாசித்து ஃபோனில் பேசிக்கொள்வதுண்டு. இரண்டு நண்பர்கள் எப்போது போர் தொடங்கும் என்ற பரபரப்பிலேயே இதை வாசிப்பார்கள். இழுக்கிறார் என்று ஒருவர் சொன்னார். நான் சொன்னேன். எப்படிப்பார்த்தாலும் ஒரு மூவாயிரம் பக்கம் இந்தப்போரை எழுதப்போகிறார். அதற்கு ஆயிரம் பக்கமாவது பிரிஃபேஸ் தேவைதானே என்று. அனைவரும் சாகப்போகிரார்கள். ஒரு பெரிய போர் திரண்டுகொண்டிருக்கிறது . இந்தத்தருணங்களில்  மனிதர்கள் எப்படியெல்லாம் மாறுவார்கள் என்னென்ன சொல்வார்கள் என்ன கணக்குகளை எல்லாம் தீர்ப்பார்கள் என்பது மனித மனங்களை ஆழமாக ஆராய்வதற்குரிய சந்தர்ப்பம். எந்த நல்ல எழுத்தாளனும் இதையெல்லாம் தவறவிடமாட்டான். கதையை பரபரவென்று கொண்டு செல்வதற்காக இந்தச் சந்தர்பங்களை சொல்லாமல் சென்றால் அது இலக்கியமே அல்ல . இலக்கியவாசிப்புக்கு கதைவாசிப்புப் பழக்கம்தான் மிகப்பெரிய தடை என்று தெரிந்துகொண்டேன். இந்தச்சந்தர்ப்பம்தான் போரைவிடவும் முக்கியமானது என எனக்குப்படுகிறது. தனியாகவே போருக்குமுந்தைய சந்திப்புகள் என ஒரு நாவல் எழுதியிருக்கலாம்


சாரங்கன்