அன்புள்ள ஜெ
ஏற்கனவே ஓர் உரையில் மகாபாரதத்தின் உச்சங்களில்
ஒன்று பீமன் தன் கையால் உணவு உருட்டிக்கொடுக்க தன் மைந்தர்களைக் கொன்றவன் கையால் திருதராஷ்டிரர்
உணவுண்ணும் காட்சி என்று சொல்லியிருக்கிறீர்கள். அந்த இடம் இப்போது முதலாவிண் நாவலில்
வந்துசென்றது. திருதராஷ்டிரரின் பசி மட்டுமல்ல அதில் தெரிவது. என்னை சாபமிடுங்கள் என்று
பீமன் கேட்கும்போது அவர் ஆசீரவாதமே அளிக்கிறார். அவருடைய இயல்பென்ன என்றுதான் அந்த
இடம் காட்டுகிறது
செல்வக்குமார்