வெய்யோன்’ – 29
மிக நிறைவாக 
நிம்மதியாக இருந்தது இன்றைய பகுதி. ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் ஆழ்ந்து 
கொள்ளும் மனதின் உறவு புரிந்து கொள்ள முடியாதது. இன்று அனைவரும் 200 
கால்களுடன் கைகளுடன் எனும் போது எல்லோரும் ஒன்றாகி கலந்து, மனம் நிறைந்து 
.. இப்போது செத்தால் சந்தோசம் எனும் கணங்கள் போல்..  விதுரர் சொன்னது போல 
தெய்வங்களுக்குரிய தருணம். 
எல்லோர்க்கும் 
சற்றென்று ஒரு வயதில் காற்று உடலில் சென்று ஊதி விட்டது போல உடல் 
பெருக்கும். மது போன்ற வகைகள் இன்றி ஒரு வசந்த பருவத்தில் அல்லது சரியாக 
சொன்னால் மணம் முடிந்து பின் வரும் உடல் மன மாற்றங்களினால், அடையும் 
நிறைவும் உடலை ஊதி விரிய வைக்கும். உடல் தசைகள் மகிழ்ந்து விரிவு கொள்ளும் 
நாட்கள். பின் மெதுவாக தரை இறங்கும் இறகு போல 
அனைவரும்
 சாப்பிட்டு விட்டு மது அருந்தி தன்னை மறந்து கூட்டமாக இருக்கும் இந்த நாள்
 அற்புத கனவு. பானுமதி எல்லோரையும் வந்து பார்த்து விட்டு செல்வது ஒரு 
தாயின் பார்வை வருடல் போல.  
அவர்கள் வயிற்றில் அடைத்த இந்த உணவு
 உண்டாட்டு நாள் தான் பின்னாளில் அவர்கள் அனைவரும் ஏங்கி கொண்டு நினைத்து 
கொள்ள கூடிய நாளாக இருக்கலாம். 
அன்புடன்
லிங்கராஜ் 
