Saturday, January 30, 2016

தந்தை



அரண்மனையில் தென்படும் விழியற்ற முதியவர்,   தன் வாழ்நாளில் ஒன்றுக்காக வேறு எவற்றையும் பார்க்கத் தவறியவரின் குறியீடாக இருக்கிறார்.  கர்ணன் தன் கேட்டிருந்த தீர்க்கத்தமஸின் கதையினால் அந்த உருவை அங்கு காண்கிறான். தீர்க்கதமஸ் தம் காமத்தில் தன்னைத்தவிர வேறு எதையும் கண்டவர் இல்லை.  அது நூற்றுக்ககணக்கான பிள்ளைகள் கொண்ட விழியிழந்தவரின் அரண்மனை என்பதால் அவனுக்கு அந்த மனவுரு தோன்றூகிறது. பின்னர் தீர்க்கத்தமஸ் போலில்லாமல்  பிள்ளைகள்பால் கொண்டிருக்கும் பேரன்பில் திருதராஷ்டிரர் வேறுபட்டிஎருப்பதை நேரில் காணும்போது  கர்ணனின் மனதின் வழிவந்த அந்த பிம்பம் மறைந்துவிடுகிறது.

அங்கு தந்தைமையின் பேரன்பைக் காணும் ஜெயத்ரதன் தன் தந்தை தன் மீது கொண்ட பேரன்பை நினைவு கூறுதலின் வழியாக தன் தந்தையின் பிம்பத்தை அங்கு காண்கிறான். இந்த பிம்பமெல்லாம், இழந்தவர்களின் கண்களுக்குத்தான் தென்படுகிறது. கர்ணன் ஒருவகையில் இழந்தவன் என்றால், ஜெயத்ரதனும் ஒருவகையில் இழந்தவன். ஆனால் இழப்பு என்பதை இதுவரை அறியாதவர்களான துரியோதனன் முதலான கௌரவர்கள் கண்களுக்கு இத்தகைய பிம்பங்கள் தெரிவதில்லை

தண்டபாணி துரைவேல்