Saturday, January 23, 2016

தேவதைகள்



ஜெ சார்

வெண்முரசின் அற்புதமான அழகுள்ளபகுதிகள் இந்தக்குழந்தைகள் வரும் இடங்கள். அவர்களைப்பார்க்க வெளிநாட்டு சிற்பங்களிலும் ஓவியங்களிலும் வரும் செரூப்ஸ் போல தோன்றுகிறது. சொற்கத்துக்குக் கூட்டிச்செல்லும் தேவதைகள். ஆனால் அவர்களெல்லாம் எப்போதுமே  மார்பிளில் செதுக்கப்பட்டிருப்பார்கள். கலருடன் இருப்பார்கள். அவர்கள் வெள்ளைக்குழந்தைகள்

இங்கே எல்லாமே கருப்பு. எலி, பன்னிக்குட்டி, யானைக்குட்டி எருமைக்கன்று என்றுதான் உவமையே சொல்கிறீர்கள். அந்தக்கற்பனையே அற்புதமாக இருக்கிறது

செல்வா