Friday, January 29, 2016

வெய்யோன் இனியன்



என் இனியன் வெய்யோன். ஏதோ காரணத்தால் சிறிய வயதிலிருந்தே சூரியன் மேல் எனக்கு களிமயக்கு ஒன்றுண்டு.சிறுபிராயங்களில் காரணமின்றியே கர்ணனை பிடிக்கும்.. அவனை போன்ற வாழ்வையே எனக்குள் பெற்றிருப்பதாகவே எனக்குள் எப்போதும் ஒரு எண்ணமுண்டு.. சுயோதன் மேலும் பிரியமுண்டு. அவனின் நற்குணங்கள் உலகில்தெளிவாக எடுத்தாளப்பட்டதாகவே எனக்கு தெரியவில்லை.. 

முதன் முதலில் வெண் முரசே அதை சரியான போக்கில் கையாள்கிறது. இதன் மூலம் சுயோதனின் உள்ளம் மற்றும் நட்பில் அவன் கொண்ட பிடிப்பு அனைத்தும் உணர முடிகிறது.கர்ணன் சிறுமைப் படுத்தப்படும் இடங்கள் எல்லாம் என்னையே அங்கு நான் உணர்கிறேன். அவன் பெருமைப்படுத்தப்படும் ஷணங்கள் ஒவ்வொன்றும் மிகப் பெரிய நிறைவை எனக்குள் உருவாக்குகிறது. அப்போது கர்ணனை நானும் பார்க்கிறேன். அவனின் மணிக்குண்டலங்களை உணர்கிறேன்.

இப்போது வெய்யோன் என்ற வார்த்தையே என்னுள் பல நேரங்களில் ஜெபம் மாதிரி ஓடுகிறது. சுஜாதனை கட்டிப்பிடித்து காப்பாற்றி விட்டாய்.. காப்பாற்றி விட்டாய் என் வெய்யோனின் இழிவை ஈடுகட்டி விட்டாய் என நெஞ்சார அணைத்து விம்ம தோன்றுகிறதய்யா.. இளம் கெளரவர்கள் என்னையும் களிப்புற செய்கிறார்கள். என்னுள் உள்ள தாய்மையை மீட்டு ஏழ செய்திருக்கிறார்கள்..

தங்களன் அனைத்து பாகங்களையும் விட இவ்வெய்யோன் என் அணுக்கமானது,அனைத்துமானதாக இருக்கும் என தோன்றுகிறது.
தங்களின் எழுத்தில், சிந்தனையில் ஒரு சரஸ்வதி கடாக்ஷம் உள்ளது. அதுவே தங்களுள் மேலும் பொலிவுற என் வாழ்த்துக்கள்.. 

சுவாமி ஆர்