Tuesday, January 26, 2016

குடிகாரர்களின் கொண்டாட்டம்







ஜெ

இன்றைய அத்தியாயத்தை வாசித்துச் சிரித்துக்கொண்டே இருந்தேன். குடிகாரர்களின் கொண்டாட்டம். எதையுமே உணராமல் சாப்பிட்டுக்கொண்டு எழுந்துபோகிறவர்கள். குழந்தையாக ஆகிவிடுபவர்கள். முழுப்போதையிலும் கடமையுணர்ச்சியுடன் இருக்கும் துச்சாதனன். ஒன்றையே சொல்லிக்கொண்டிருக்கும் துரியோதனன். பானுமதி வருகிறாள் என்று தெரிந்ததும் அண்ணனைக் கைவிட திரிமானிக்கும் துச்சலன். பிறரை நல்வழிப்படுத்த தான் நிறையவே குடிக்கும் சுபாகு. விதவிதமாக சிரிக்கும் ஜயத்ரதன். சரி எனக்கும் ஒரு கோப்பை கொண்டு வா என்று சொல்லும் கர்ணன்

பெரியதாகச் சொல்லவில்லை என்றாலும் கௌரவர்கள் அத்தனைபேருக்கும் ஒரு குணச்சித்திரம் உருவாகிவருவதைக் காண ஆச்சரியமாக இருக்கிறது. சுபாகு கொஞ்சம் புத்திசாலி. அவன் மகன்தன் சுஜயன். அவன் சமணனாக ஆகிவிட்டான் என்ற கதை இதற்கு அடியில் பேசப்படாது கிடக்கிறது. அத்தகை கௌரவர்களும் சமான்மானவர்கல். ஆனால் அனைவருக்கும் தனித்தனி முகம் இருக்கிறது

இதுவரை எத்தனை கதாபாத்திரங்கள் வந்துபோய்விட்டன. பிரமிப்பாக இருக்கிறது. இது கதையல்ல கடல்!

பாஸ்கரன்