Wednesday, January 27, 2016

இரு விழியின்மைகள்



மிக வலுவான படிமம் இன்றைய  அத்தியாயத்தில் உருவாகியுள்ளது.வெண்முரசு நாவல்கள்எப்போதுமே எனக்குள்படிமங்களின் தொகையாகவேஉட்சென்றுள்ளது. இந்திரநீலம்என்றவுடன் சாத்யகியும்திருஷ்டத்யும்னும் வறண்டவெம்பாலையில் தங்களின்குதிரைகளில் செல்லும் காட்சியேமுதலிலெழும். ஈவிறக்கமற்றமணல்வெளியில் உள்ளிருக்கும்மானுடக் கீழ்மையே கருணையின்ஊற்றாக மாறும்பெருந்தரிசனத்தை சுட்டி நிற்கும்படிமம் அது.

இன்றைய அத்தியாயத்தில்இரண்டு விழியிழந்தவர்களுக்குஇடையே நிற்கும் கர்ணனின்படிமம் எண்ண எண்ண விரிந்தபடியே உள்ளது. ஒருபக்கம் தன்வாழ்வெல்லாம் காமத்தை மட்டுமேதன் வாழ்வெனக் கொண்டமுனிவர். தன் வாரிசுகள் ஐந்துபெரும் ராஜ்ஜியங்களாககிளைவிட்டு செழித்துள்ளனர்.ஆனால் தனித்து அலைந்துகொண்டிருக்கிறார்.

மறுபக்கம் ஒரு அரசர். இசையையேதன் வாழ்வெனக் கொண்டவர்.இவருக்கும் எண்ணற்ற வாரிசுகள்.மைந்தர்கள் சூழநிறைந்திருக்கிறார்.

முனிவரைக் கைவிட்டது எது? தன்காமம் வேறொன்றாகமாறியிருப்பின் இங்கு அஸ்தினபுரிமுற்றத்தில் தனித்து நின்றிருக்கமாட்டாரோ?

பாலாஜி பிருத்விராஜ்