Monday, January 18, 2016

பேரன்பன்




அன்புள்ள ஜெ

வெண்முரசின் அத்தியாயங்கள் தீம்பார்க்கிலே உள்ள பாதைபோலச் செல்கின்றன. சாகசம், அரசாங்கவிவகாரங்கள், காதல், குடும்பச்சண்டை, உடனே உணர்ச்சிகரமான ஒரு காட்சி. அடுத்து என்ன என்று எண்ணவைக்கின்றன. இப்படிச் சுழற்றியடிப்பதனாலேயே இதைவிட்டு இறங்கமுடியாமலும் இருக்கிறதென்று நினைக்கிறேன். இதை விட்டு மனதை நீக்கவே முடியவில்லை

சுஜாதனின் கேரக்டர் மனதில் நிற்கிறது. டீன் ஏஜ் பையன்களுக்குரிய கன்றுக்குட்டித்தனம். அதை மிக எளிதாக ஓரிரு கோடுகளிலேயே உருவாக்கிவிடுகிறீர்கள். அதன்பின் அவன் அப்படியே விஸ்வரூபம் எடுக்கிறான். அங்கே அவனைப்பார்க்கவே பயமாக இருக்கிறது. திருதராஷ்டிரரில் தொடங்கிய பேரன்பின் வெளிப்பாடு அவன்

சுப்ரமணியம்