Monday, January 18, 2016

பெருநிலையை அறிந்தவர்கள்






அன்னமே பிரம்மம் என்னும் வரிக்கு மேல் வேதங்களில் இருந்து கௌரவர் அறிந்துகொள்ள ஏதுமில்லை

மிக முக்கியமான வரி. நகைச்சுவையாகச் சொல்லப்பட்ட வரி. ஆனால் அது அதே அத்தியாயத்தில் விரிவாக கவித்துவமாக வெளிப்பட்டுள்ளதையும் காணலாம். அன்னம் என்றால் உடல். உடலும் உடலும் இணைந்து ஒரே அன்னமாக, பிரம்மமாக ஆகக்கூடிய நிலையை கௌரவர் மிக எளிதாக அடைவதை அந்த அத்தியயாமே காட்டுகிறது. அந்த உச்சநிலையை அடைந்தவர்களுக்கு வேறு தியாயமோ ஞானமார்க்கமோ தேவையில்லை. ஒருவரொடு ஒருவர் தொட்டு அவர்கள் ஒன்றாகா இணைகிறார்கள் .

அதேபோலச் சாப்பிடும்போதும் அவர்கள் அன்னத்துடன் அப்படியே ஒன்றாக இணைகிறார்கள். உணவு உறவு இரண்டிலுமே அவர்கள் இரண்டற்ற நிலையை அடைகிறார்கள். அது ஒரு பெருநிலைதான்

சுவாமி