Sunday, July 10, 2016

கணிகர்



ஜெ

கணிகர் என்ற கதாபாத்திரத்தைப்பற்றி மகாபாரதத்திலே தேடினேன். ஒரே ஒரு இடத்தில்தான் வருகிறார். திருதராஷ்டிரனுக்கு தீமையை உபதேசிக்கிறார். அவ்வளவுதான் அவரது இடம். கணிகநீதி என்று ஒரு நீதி இருக்கிறது. அது கிட்டத்தட்ட சாணக்கியநீதிபோல இருக்கிறது. குடிலநீதி அது

கணிகரை நீங்கள் தீமையின் மறுவடிவமாக வளர்த்து எடுத்தீர்கள். காராணமே இல்லாத தீமை அவர்ரிடம் மட்டுமே இருக்கிறது. எந்த நோக்கமும் இல்லாத தீமை. இருட்டு போல ஒரு பிரபஞ்ச நிகழ்வு அது

ஆனால் பன்னிருபடைக்களத்தில் அது கிருஷ்ணனின் மறுபக்கம் என்பதுபோல ஒரு குறிப்பு வருகிறது. கணிகரே சொல்கிறார். சிசுபாலனின் சக்கரத்துடன் தன்னை உவமைப்படுத்தி அதைக்கொண்டு தன்னையும் கிருஷ்ணனையும் புரிந்துகொள்ளவேண்டும் என்கிறார். முக்கியமான நுட்பமான இடம்

கணிகரை எங்கே கொண்டுசேர்க்கப்போகிறீர்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்

சுவாமி