ஜெ
கௌரவர்களும் பாண்டவர்களும் சபதம் எடுக்கும் இரண்டுவகையான கொற்றவை அன்னையரின் சித்திரங்களையும் ஒப்பிட்டுப்பார்த்தேன். இருவருமே குருதிபலி கொள்பவர்கள். பாண்டவர்களின் தெய்வம் ரக்தை என்று சொல்லப்படுகிறது. குருதிவிடாய் கொண்டது. ஆனால் கௌரவர்களின் தெய்வம் பரோக்ஷை எனப்படுகிறது. மறைந்திருப்பவள் வெளிப்படும் அன்று மட்டும் ரத்தக்காவு கேட்பவள். இந்த இரண்டு அன்னையருக்கும் இடையே இருக்கும் வேறுபாடுதான் முக்கியமான குறியீடு என தோன்றுகிறது
அர்விந்த்