Sunday, July 1, 2018

படைகளின் மனநிலை



ஜெ

இந்த அத்தியாயம் ஒரு தனி பகுதியாக எடுத்து வைத்து வாசிக்கவேண்டியது. அதை பூரிசிரவஸ் நகருக்குள் நுழைவது என்று கடந்துசெல்லுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதில் படைகளை எப்படி ஒருங்கிணைக்கிறார்கள். படைகளின் மனநிலை என்ன படைகள் எப்படி ஒரே உடலாகவும் ஒரே அமைப்பாகவும் செயல்படுகின்றன என்ற விரிவான சித்திரம் உள்ளது. அதேசமயம் ஒரு தனிவீரனின் பயமும் தயக்கமும் எப்படி மொத்தப்படைக்கே வந்துவிடமுடியும் என்பதும் காட்டப்படுகிறது

சாயங்களைத் தேர்ந்தெடுப்பதிலேயே இது சொல்லப்படுகிறது. பளீர் நிறம் வேண்டும். ஆனால் ரத்தம் தெரியக்கூடாது. நிறம் வெற்றியை உருவாக்கவேண்டும். படைகள் ஒரே உடலாக ஆனதனால் மொத்தப்படையாக கடந்துபோக இடமிருந்தால்தான் செல்கின்றன. இல்லாவிட்டல தயங்கி நின்று முட்டிமோதுகின்றன. மனிதக்கூட்டமாக உருமாறி சின்ன இடைவெளி வழியாகச் செல்வதில்லை.

இந்த ஒரு அத்தியாயத்தில் ராணுவம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பவற்றை எல்லாம் அப்படியே சரித்திரத்தில் பொதுமக்களின் மனநிலைக்கும் பொருத்திப்பார்க்கலாம்

சரவணன்